ஐப்பசி துலா ஸ்நானம்

பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவிரி நதியில் சங்கமமாவதால், ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள். பொதுவாகவே நதி நீராடுதல் என்பது விசேஷம். அதிலும் காவிரியில் நீராடுவது இன்னும் விசேஷம். அதைவிட மகா புண்ணியம்... ஐப்பசியில் காவிரியில் நீராடுதல்!


காவிரி ஓடும் ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, சங்கமேஸ்வரர் கோயில் படித்துறை, திருவையாறு திருவிடைமருதூர், பூம்புகார், பவானி, கும்பகோணம், குணசீலம், தலைக்காவிரி, திருச்சி முக்கொம்பு ஆகிய இடங்கள் புனித ஸ்நான கட்டங்களாகக் கருதப்படுகிறது. நீராடிய பின் அன்னதானம் செய்துவிட்டு சிவனை தரிசித்தல் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதுதிருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தடை நீங்கும்

எண்ணத்தை ஈடேற்றித் தரும் காவிரி துலா ஸ்நானம்; புண்ணியமும் பித்ரு ஆசியும் தரும் துலா ஸ்நானம்